தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'அதிமுக அரசு செயல்திட்டம் இல்லாமல் செயல்படுகிறது' - கனிமொழி குற்றச்சாட்டு - MP Kanimozhi slams ADMK govt

சென்னை: கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அதிமுக அரசு எந்த ஒரு திட்டமும் இல்லாமல் செயல்படுவதாக திமுக எம்.பி. கனிமொழி விமர்சனம் செய்துள்ளார்.

MP Kanimozhi slams ADMK govt for not handling corona issue properly
MP Kanimozhi slams ADMK govt for not handling corona issue properly

By

Published : Apr 24, 2020, 11:42 PM IST

Updated : Apr 25, 2020, 10:25 AM IST

சென்னை அண்ணா நகரில் ஏழை மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை திமுக எம்.பி. கனிமொழி வழங்கினார். இதற்கு முன்னதாக ஓட்டேரியில் ரத்த தானம் செய்து ரத்த தான நிகழ்வைத் தொடங்கி வைத்தார். அப்போது திமுக வட சென்னை மாவட்டச் செயலாளர் சேகர் பாபு உடனிருந்தார்.

பின்னர் அண்ணா நகரில் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, "தமிழ்நாட்டில் மருத்துவர்களுக்குப் போதுமான பாதுகாப்பு இல்லை. அதிமுக அரசு கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் எந்த ஒரு செயல்திட்டமும் முன்னேற்பாடுகளும் இல்லாமல் செயல்பட்டு வருகின்றது. இதுவே மருத்துவர்கள் போராட்டம் செய்வதற்கு காரணமாக அமைகின்றது" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க... ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கனிமொழி நிவாரணம்

Last Updated : Apr 25, 2020, 10:25 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details