தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எனது பிறந்தநாளை கொண்டாட விருப்பமில்லை - கனிமொழி எம்.பி.

சென்னை: குடியிருமை திருத்தச் சட்ட போராட்டம், உயிரிழப்பு ஆகியவற்றை மனதில் கொண்டு திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி பிறந்தநாள் கொண்டாட விருப்பமில்லை என தெரிவித்துள்ளார்.

MP Kanimozhi Birthday
MP Kanimozhi Birthday

By

Published : Jan 3, 2020, 7:12 PM IST

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றுவரும் நிலையில், தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என தொண்டர்களுக்கு திமுக மகளிர் அணி செயலாளர், எம்.பி கனிமொழி வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "குடியிருமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டு அதை எதிர்த்து மாணவர்கள், மக்கள், அரசியல் இயக்கங்கள் உள்ளிட்டோர் நாடு முழுவதும் போராடிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது அரசு வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு பலர் உயிரிழந்துள்ள நிலையில், எனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என எண்ணுகிறேன்.

தலைவர் கலைஞர், ஸ்டாலின் வழிகாட்டுதலோடு தொடர்ந்து ஜனநாயகம் காக்க போராடுவோம்" என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:

‘குடியுரிமை திருத்தச் சட்டத்தை அதிமுக தடுத்திருக்க முடியும்’ - கனிமொழி

ABOUT THE AUTHOR

...view details