சென்னை:மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் குழுவின் உறுப்பினர்களை நியமனம் செய்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்த குழுவின் தலைவராக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கிடைத்தது பஞ்சாயத்துராஜ் குழு தலைவர் பதவி: முதலமைச்சரை சந்தித்து வாழ்த்துப்பெற்ற எம்.பி. கனிமொழி! - பஞ்சாயத்து ராஜ் குழு தலைவராக கனிமொழி நியமனம்
பஞ்சாயத்து ராஜ் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்ட திமுக எம்.பி. கனிமொழி, தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
mp
இதையடுத்து எம்.பி. கனிமொழி, முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். முகாம் அலுவலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை இன்று (அக்.6) சந்தித்த அவர், மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டதற்காக வாழ்த்துப் பெற்றார்.