தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மழைநீர் வடிகால்வாயை புதிதாக கட்ட வேண்டும் - நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் - MP Dayanidhi Maran

சென்னை: தமிழ்நாடு நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளர் கார்த்திக்கை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், வால்டாக்ஸ் சாலையில் பயன்பாடற்ற நிலையில் உள்ள மழைநீர் வடிகால்வாயை புதிதாக கட்ட கோரிக்கை விடுத்துள்ளார்.

தயாநிதிமாறன்
தயாநிதிமாறன்

By

Published : Oct 21, 2020, 2:52 PM IST

ஈவேரா நெடுஞ்சாலை மற்றும் பேசின்பிரிட்ஜ் சாலை ஆகியவற்றை இணைக்கும் வால்டாக்ஸ் சாலையில் பயன்பாடற்ற நிலையில் மழைநீர் வடிகால்வாய் உள்ளது. மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், துறைமுகம் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் சேகர்பாபு ஆகியோர் தமிழ்நாடு நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளர் கார்த்திக்கை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து இதனை கட்டக் கோரி மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தயாநிதிமாறன், "வால்டாக்ஸ் சாலையில், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பழமையான மழைநீர் வடிகால் செயலற்ற நிலையில் உள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு, சென்னையில் வெள்ளம் வந்தபோது வீட்டிற்குள் மழைநீர் புகுந்ததால் அங்கு வசித்த மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகினார்கள்.

மழையின்போது அமைக்கப்பட்ட மழைநீர் கண்காணிப்பு குழு தனது அறிக்கையில் பழைய கால்வாயை இடித்துவிட்டு புதிய கால்வாய் கட்ட பரிந்துரைக்கப்படும் என கூறப்பட்டது, ஆனால் இதுவரை கால்வாய் அமைக்கும் பணி நடைபெறவில்லை. தற்போது மழைக்காலம் என்பதால் மழைநீர் அதிகமாக வந்தால் அங்குள்ள பகுதி மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாவர்கள் .

தயாநிதிமாறன்

எனவே, உடனடியாக புதிய மழை நீர்வடிகால்வாயை அமைக்க வேண்டும் என மனு அளித்துள்ளோம். யானைகவுனி ரயில் மேம்பாலம் பணிகள் நடைப்பெற்று வருகிறது. சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் மேம்பாலம் குறித்து துறைமுகம் சட்டப்பேரவை உறுப்பினர் சேகர் பாபு கேள்வி எழுப்பிவருகிறார். அப்பணியும் விரைவில் முடியும் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

ஈசிஆர் பகுதி டோல் இடங்களில் பாஸ்ட் டாக் தொழில்நுட்ப பிரச்னை இருப்பதாகவும் தற்போது அதை சரி செய்யப் பட்டுவிட்டதாகவும் நெடுஞ்சாலை துறை முதன்மைச் செயலாளர் தெரிவித்தார்" என்றார்.

இதையும் படிங்க: TET தேர்வில் ஒருமுறை தேர்ச்சி பெற்றால் ஆயுள் முழுவதும் செல்லும்...!

ABOUT THE AUTHOR

...view details