தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மவுலிவாக்கம் கட்டிட இடிப்பு வழக்கு: சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டம் - building collapse case

சென்னை: மவுலிவாக்கம் கட்டிடத்தை இடிப்பதற்காக ஆன செலவை திரும்ப செலுத்தினால் மட்டுமே நிலம் ஒப்படைக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

உயர் நீதிமன்றம்

By

Published : Feb 6, 2019, 11:32 PM IST

சென்னை மவுலிவாக்கத்தில் தனியார் கட்டுமான நிறுவனம், 103 சென்ட் பரப்பில், 86 வீடுகளைக் கொண்ட இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டியது. இதில் ஒரு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 61 பணியாளர்கள் பலியானார்கள். இதைதொடர்ந்து அந்த கட்டிடம் கட்டப்பட்டிருந்த நிலத்தை காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் தன் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டது. அந்த விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்த ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையிலான ஆணையம், விதிமீறல் காரணமாகவே அந்த கட்டிடம் இடிந்து விழுந்ததாகவும், அதில் இருந்து 50 மீட்டர் தூரத்தில் உள்ள மற்றொரு அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடமும் பாதுகாப்பானதாக இல்லாததால், அதையும் இடிக்க வேண்டும் என, அரசுக்கு பரிந்துரைத்தது. இந்த பரிந்துரையை ஏற்று கடந்த 2016-ம் ஆண்டு நவம்பரில் அந்த கட்டிடம் இடிக்கப்பட்டது. இந்த கட்டிடத்தை இடிப்பதற்கு ரூ.ஒரு கோடியே 11 லட்சம் செலவிடப்பட்டதாவும், அதை திருப்பி செலுத்த வேண்டும் எனவும் மவுலிவாக்கம் கட்டிட உரிமையாளருக்கு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் கடிதம் அனுப்பியது.

இந்த வழக்கு தற்போது தலைமை நீதிபதி வி.கே.தஹில் ரமானி மற்றும் நீதிபதி துரைசாமி அடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் போது அரசு தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் , " கட்டிட அனுமதிக்காகவே ஒரு கோடியே 11 லட்சத்தை மனுதாரர் செலுத்தியுள்ளார். விதிமீறி கட்டியதால் அந்த தொகை பறிமுதல் செய்யப்பட்டுவிட்டது. அதைத் திரும்பக் கேட்க மனுதாரருக்கு உரிமையில்லை" என்று வாதிட்டார். இதையடுத்து, " மனுதாரரின் விதிமீறல்கள் காரணமாகவே கட்டிடம் இடிக்கப்பட்டுள்ளது. இதற்கான செலவை அரசு மீது சுமத்த முடியாது. இத்தொகையை மனுதாரர் நிறுவனம் தான் செலுத்த வேண்டும்" எனக் கூறிய நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details