சென்னை:கரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்ட மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கான நேர்முகத் தேர்வு, வரும் 19ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
மோட்டார் வாகன ஆய்வாளர் பணி: நேர்முகத் தேர்வு நாள் அறிவிப்பு - Motor Vehicle
கரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்ட மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கான நேர்முகத்தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வரும் 19ஆம் தேதி நேர்முகத் தேர்வு
இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'கடந்த ஜூன் மாதம் 8ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை நடைபெற இருந்த மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கான நேர்முகத் தேர்வு, கரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. இந்த நேர்முகத் தேர்வு வரும் 19ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை நடைபெறும்.
இந்தப் பணிக்கு தகுதி வாய்ந்த 226 பேர் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு இருக்கின்றனர். சம்பந்தப்பட்ட அனைவரும் குறிப்பிட்ட தேதிகளில் கலந்து கொள்ள வேண்டும்' என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதையும் படிங்க: பருவமழை அடுத்த வாரம் தீவிரமடையும்- இந்திய வானிலை ஆய்வு மையம்!