தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நேருக்கு நேர் மோதிய இருசக்கர வாகனம்; அரசு ஊழியர் பலி! - motor cycle accident

சென்னை : திருநின்றவூர் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில், ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியது

By

Published : Aug 21, 2019, 12:26 PM IST

சென்னை பெரம்பூரை சேர்ந்த தினேஷ் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் திருநின்றவூர் அருகே கரலபாக்கத்தில் உள்ள தனது பாட்டி வீட்டிற்குச் சென்றுள்ளார்.

நேருக்கு நேர் மோதிய இருசக்கர வாகனம், அரசு ஊழியர் ஜெயராமன் உயிரிழந்தார்

அப்போது திருநின்றவூர் பெரியப்பாளையம் சாலையில் சென்றபோது அவ்வழியாக லிப்ட் கேட்ட இரண்டு சிறுவர்களை தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றியுள்ளார்.

பின்பு இருசக்கர வாகனம், பாக்கம் கிராமம் அருகே வந்தபோது முன்னாள் சென்ற பேருந்தை முந்த முயற்சித்துள்ளார், அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த இருசக்கர வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியதில், எதிரே வந்த ஓய்வுபெற்ற குடிநீர் வாரிய ஊழியர் ஜெயராமன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்தை ஏற்படுத்திய இருசக்கர வாகனத்தில் வந்த மூவரையும் அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த விபத்து குறித்து பூவிருந்தவல்லி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details