சென்னை:அடையார் ஆஸ்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜனமா(63) இவரின் கணவர் இவரை விட்டுப் பிரிந்து சென்றதால் வீட்டு வேலை செய்து தனியாக வசித்து வருகிறார். இவருடைய மகன் ரமேஷ் பெருங்குடி பகுதியில் இரண்டு பெண்களுடன் திருமணம் ஆகி வசித்து வருகிறார். இதனால் ரமேஷ் அவரது தாய் ஜனமாவை பார்த்துக் கொள்ளாமல் தனியாக விட்டுச் சென்று விட்டுள்ளார்.
இதனால் தனியாக வசித்து வந்த ஜனமா முதியோர் உதவித் தொகை வேண்டி பலமுறை விண்ணப்பம் கொடுத்தும் அவருக்கு மகன் உள்ளதால் உதவித் தொகை தர முடியாது எனச் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் ஜனமாவை அவரது மகன் ரமேஷ் பல்வேறு கொடுமைகளைச் செய்வதாக மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளார். ஆனால் இதுவரை தன்னை யாரும் விசாரணைக்கு அழைக்கவில்லை எனவும் தனது மகன் ரமேஷ் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஜனமா குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அடையாறு துணை ஆணையர் காவல் நிலையத்தில் மீண்டும் ரமேஷ் மீது நடவடிக்கை எடுக்கும்படி ஜனமா புகார் அளித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து ரமேஷ் போலியாக ஆதி திராவிடர் எனச் சாதி சான்றிதழ் பெற்று ஆந்திராவில் சட்டக்கல்லூரி படிப்பை முறைகேடாக முடித்து தற்போது வழக்கறிஞராக உள்ளார். இதனால் போலியாக ஆதிதிராவிடர் சாதி சான்றிதழ் பெற்றது குறித்து தேசிய பட்டியல் ஆணையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.