சென்னை:தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 16 ஆயிரத்து 200 பேருந்துகள் வருகிற 15,16,17 ஆகிய 3 நாட்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. சென்னை, மதுரை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில் இருந்து இந்த பேருந்துகள் மாநிலத்தின் முக்கிய ஊர்களுக்கு இயக்கப்படும். இதற்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கப்பட்ட நிலையில் 1,33,659 பொதுமக்கள் முன்பதிவு செய்துள்ளார்கள் என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "வரும் பொங்கல் திருநாளை முன்னிட்டு, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் ஜன.11ஆம் தேதி முதல் ஜன.20ஆம் தேதி வரையிலான நாட்களுக்கு மொத்தம் 1,33,659 பொதுமக்கள் முன்பதிவு செய்துள்ளார்கள். சென்னையில் இருந்து 60,799 நபர்களும், பிற ஊர்களிலிருந்தும் 72,860 நபர்களும் முன்பதிவு செய்துள்ளார்கள்.