தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் 15 மண்டலங்களிலும் ஆயிரத்தை கடந்த கரோனா தொற்று! - சென்னை மாநகராட்சி

சென்னை: மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களிலும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி

By

Published : Jul 2, 2020, 4:18 PM IST

கரோனா வைரஸ் தமிழ்நாடு முழுவதும் அதிகமாக பரவி வருகிறது. குறிப்பாக சென்னையில் ராயபுரம், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, அண்ணாநகர், திருவிக நகர் போன்ற இடங்களில் அதன் தாக்கம் அதி தீவிரமாக உள்ளது.

இதன் பரவலைத் தடுக்க மாநகராட்சி அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறது. இருப்பினும் நோய்த்தொற்று குறையாமல் தினமும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. ஏற்கனவே 14 மண்டலங்களில் ஆயிரத்தை கடந்து இருந்த நிலையில் எஞ்சியிருந்த மணலி மண்டலத்திலும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்தது. மேலும் திருவிக நகரிலும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்தது.

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலை மண்டலவாரியாக மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

அதன்படி

ராயபுரம் - 8 ஆயிரத்து 361 பேர்
தண்டையார்பேட்டை - 6 ஆயிரத்து 788 பேர்
தேனாம்பேட்டை - 6 ஆயிரத்து 773 பேர்
கோடம்பாக்கம் - 6 ஆயிரத்து 471 பேர்
அண்ணா நகர் - 6 ஆயிரத்து 613 பேர்
திருவிக நகர் - 5 ஆயிரத்து 9 பேர்
அடையாறு - 3 ஆயிரத்து 695 பேர்
வளசரவாக்கம் - 2 ஆயிரத்து 755 பேர்
அம்பத்தூர் - 2 ஆயிரத்து 689 பேர்
திருவெற்றியூர் - 2 ஆயிரத்து 329 பேர்
மாதவரம் - 1, 971 பேர்
ஆலந்தூர் - 1, 523 பேர்
பெருங்குடி - 1, 566 பேர்
சோளிங்கநல்லூர் - 1, 566 பேர்
மணலி - 1, 091 பேர்

என மொத்தம் 15 மண்டலங்களில் 60 ஆயிரத்து 533 நபர்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 36 ஆயிரத்து 826 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details