சென்னை:எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே கோட்டையை முற்றுகையிட்டு கரும்பு விவசாயிகள் சார்பாக பல்வேறு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நேற்று (பிப்.17) போராட்டம் நடைபெற்றது. இதில், சேதமடைந்துள்ள சர்க்கரை ஆலைனையும் ஏலத்தில் வரும் சர்க்கரை ஆலையினை தமிழக அரசு ஏற்று நடத்த வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
தொடர்ந்து மாநில அரசு அறிவித்தபடி ஒரு டன் கரும்புக்கு 4,000 ரூபாய் வழங்க வேண்டும் எனவும் தஞ்சாவூர் ஆரூரான் சர்க்கரை ஆலையில் கரும்பு விவசாயிகளின் பெயரில் போலியாக வங்கியில் பெற்ற வங்கிக்கடனை ஆலையின் பெயரிலேயே மாற்றி ஆலை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கையினை வலியுறுத்தினர்.
இதைனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில பொது செயலாளர் ரவீந்திரன், மாநில அரசு அறிவித்தப்படி ஒரு டன் கரும்புக்கு ரூ.4000 வழங்கிடவும், கரும்பு ஆலைகள் முறைக்கேடாக விவசாயிகள் பெயரில் பெற்ற வங்கிக்கடனை ஆலையின் பெயரிலேயே மாற்றிட வெண்டும் என கேட்டுக்கொண்டார்.