தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தலைமைச் செயலகம் எதிரே 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகைப் போராட்டம் - அய்யாக்கண்ணு போராட்டம்

திருவண்ணாமலை, அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிட தலைமைத் தேர்தல் அலுவலர் அனுமதிக்கவில்லை எனக்கூறி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் சென்னை தலைமைச் செயலகம் எதிரே உள்ள சாலையில் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

தலைமைச் செயலகம் எதிரே 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகைப் போராட்டம்
தலைமைச் செயலகம் எதிரே 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகைப் போராட்டம்

By

Published : Apr 5, 2021, 6:08 PM IST

சென்னை: அரவக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய தொகுதிகளில் விவசாயிகள் போட்டியிட அனுமதிக்கவேண்டும் என வலியுறுத்தி சென்னை தலைமைச் செயலகத்தின் எதிரே உள்ள சாலையில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அச்சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு, "அரவக்குறிச்சி, திருவண்ணாமலையில் வேட்பு மனு தாக்கலின்போது சட்டையில்லாமல் சென்றதால் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாக அந்தந்த தொகுதி தேர்தல் அலுவலர் தெரிவித்தார். இதுகுறித்து மறுபரிசீலனை செய்யவேண்டும் என கடந்த மார்ச் 26ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகுவிடம் மனு அளித்தோம். தற்போது தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலரிடம் இதுகுறித்து கேட்டால், உயர் நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யக்கூறுகிறார்.

தலைமைச் செயலகம் எதிரே 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகைப் போராட்டம்

திருவண்ணாமலை, அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் போட்டியிட அனுமதியளிக்காததைக் கண்டித்து தலைமைச் செயலகத்தை முற்றுகையிடவுள்ளோம்" என்றார்.

தலைமைச் செயலகத்தின் எதிரே உள்ள சாலையில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்குபெற்ற போராட்டம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவர்களை கைது செய்து வாகனத்தில் ஏற்றி அப்புறப்படுத்தினர்.

இதையும் படிங்க:உற்சாகமும் நம்பிக்கையுமாக கடமையாற்றுங்கள்... நாளை நமதே! - டிடிவி தினகரன்

ABOUT THE AUTHOR

...view details