சென்னை: ஆர்கே நகர் தொகுதியில் அதிமுக சார்பில் ஆர்.எஸ்.ராஜேஷ், திமுக சார்பில் ஜே.ஜே.எபினேசர் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், இன்று காலையில் ஆர்.எஸ்.ராஜேஷ் நேதாஜி நகர் மூன்றாவது தெருவில் பரப்புரையில் ஈடுபடுபட்டு வந்தார். அப்போது, தொண்டர்களுடன் அப்பகுதியில் பணப்பட்டுவாடாவில் அவர் ஈடுபட்டதாகவும், அதைத் தட்டிக்கேட்ட திமுகவினரின் கை, கால்களில் தாக்கியதாகவும் திமுகவினர் புகாரளித்தனர்.
காவல் நிலையத்தை முற்றுகையிட்டு திமுகவினர் போராட்டம் - election
திமுகவினர் தாக்கப்பட்டது குறித்து காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காத்தால் ஆர்கே நகர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு 50க்கும் மேற்பட்ட திமுகவினர் போராட்டம் நடத்தினர்.
காவல் நிலையத்தை முற்றுகையிட்டு - திமுகவினர் போராட்டம்
ஆனால் இது குறித்து காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இதனைக் கண்டித்து 50க்கும் மேற்பட்ட திமுகவினர் தற்போது ஆர்கே நகர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து, ஆர்.எஸ்.ராஜேஷை கைது செய்யக்கோரியும் அவரது வேட்பு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.
இதையும் படிங்க: இந்திக்கோ, இந்துவுக்கோ விரோதி திமுக அல்ல!