1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கடந்த 17ஆம் தேதி தொடங்கியது.
இதில் 1,6,9 ஆகிய வகுப்புகளில் ஆக. 24ஆம் தேதி வரை ஐந்து லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சேர்ந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
இந்த எண்ணிக்கையானது கடந்த ஆண்டுகளை விட அதிகமாகும். இந்த ஆண்டில் கரோனோ வைரஸ் தொற்று காரணமாக பொது மக்களின் பொருளாதார சூழ்நிலை நலிவடைந்து உள்ளதாலும், ஏராளமான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க தொடங்கியுள்ளனர்.
அதன் அடிப்படையில் இந்த ஆண்டு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை அதிகரிக்கத்துள்ளது.
இதையும் படிங்க: பள்ளி, கல்லூரி திறப்பு குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை - தமிழ்நாடு அரசு பதில்!