தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொறியியல் படிப்பில் சேர 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பதிவு

சென்னை: இளங்கலை பொறியியல் படிப்பில் சேர்வதற்கு தற்போது வரை 41 ஆயிரத்து877 மாணவர்கள் பதிவு செய்துள்ளதாக தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

தொழில்நுட்ப கல்வி இயக்கம்
தொழில்நுட்ப கல்வி இயக்கம்

By

Published : Jul 18, 2020, 12:18 AM IST

தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரியில் பிஇ, பிடெக் ஆகிய இளங்கலை பட்டப்படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு ஜூலை 15ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித் துறை அமைச்சர் கேபி அன்பழகன் அறிவித்தார்.

மேலும் மாணவர்களுக்கான ஆன்லைன் விண்ணப்பிக்கும் வசதியினை உயர்கல்வித்துறை அமைச்சர் ஜூலை 15 ஆம் தேதி தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து மாணவர்கள் www.tneaonline.org என்ற இணையதளத்தின் மூலம் பதிவு செய்து வருகின்றனர்.

இதனையடுத்து நேற்று மாலை 6 மணிவரை 41 ஆயிரத்து 877 மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்பதற்காக தங்களின் விபரங்களை ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 25 ஆயிரத்து 82 பேர் பதிவுக் கட்டணத்தையும் செலுத்தி உள்ளனர்.

பொறியியல் படிப்பில் சேர்வதற்கு மாணவர்கள் ஆன்லைன் மூலம் ஆகஸ்ட் 16ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். கலந்தாய்வில் பங்கேற்பதற்கான மாணவர்களின் அசல் சான்றிதழ்களை ஜூலை 31ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 20ஆம் தேதிவரை இணையதளத்தின் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி ரேண்டம் எண் வெளியிடப்படும். மாணவர்களின் அசல் சான்றிதழ்கள் தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள பொறியியல் மாணவர் சேர்க்கை சேவை மையங்கள் மூலம் ஆகஸ்ட் 24ஆம் தேதி முதல் செப்டம்பர் ஒன்றாம் தேதி வரை சரிபார்க்கப்படும்.

மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியிடப்படுகிறது. மாணவர்களுக்கான பொது கலந்தாய்வு செப்டம்பர் 17ஆம் தேதி முதல் தொடங்கி அக்டோபர் 15-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

மேலும் மாணவர்களின் வசதிக்காக 52 இடங்களில் சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் அங்கு சென்றும் பொறியியல் கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கு தங்கள் விபரங்களை பதிவேற்றம் செய்துகொள்ளலாம்.

இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேருவதற்கான கட்-ஆஃப் மதிப்பெண் குறையும் வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

ABOUT THE AUTHOR

...view details