தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள்!

சென்னை: சென்னை முழுவதும் மே மாதம் முதல் தற்போது வரை 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் நடைபெற்றுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னையில் 25,000  மேற்பட்ட மருத்துவ முகாம்கள்!
சென்னையில் 25,000 மேற்பட்ட மருத்துவ முகாம்கள்!

By

Published : Jul 30, 2020, 11:55 PM IST

தமிழ்நாடு முழுவதும் கரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்துவருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. சென்னையில் தண்டையார்பேட்டை, திரு.வி.க. நகர், அண்ணா நகர் ஆகிய மண்டலங்களில் தொற்று அதிகமாகப் பரவிவருகிறது. இருப்பினும், குணமடைந்தோரின் விழுக்காடு அதற்குச் சரிசமமாக உள்ளது.

பரவலைக் குறைப்பதற்காக மாநகராட்சியும் சுகாதாரத் துறையும் இணைந்து 15 மண்டலங்களிலும் மருத்துவ முகாம்கள் நடத்துவது, கபசுரக் குடிநீர் பாக்கெட்டுகள் வழங்குவது, முகக்கவசம் வழங்குவது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. இந்நிலையில், எத்தனை மருத்துவ முகாம்கள் நடைபெற்றுள்ளன என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

மே 8 - ஜூலை30 வரை நடைபெற்ற மருத்துவ முகாம்கள் எண்ணிக்கை பின்வருமாறு:

திரு.வி.க. நகர் - 2,371

வளசரவாக்கம் - 1,579

தண்டையார்பேட்டை - 1,986

தேனாம்பேட்டை - 2,403

அம்பத்தூர் - 1,469

கோடம்பாக்கம் - 2,240

திருவொற்றியூர் - 950

அடையாறு - 1,751

அண்ணா நகர் - 2,647

மாதவரம் - 686

மணலி - 426

சோழிங்கநல்லூர் - 1,315

பெருங்குடி - 1,302

ஆலந்தூர் - 1,467

மொத்தம் 25 ஆயிரத்து 185 மருத்துவ முகாம்கள் நடைபெற்றுள்ளன. அதில் 14 லட்சத்து 77 ஆயிரத்து 75 நபர்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details