தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அஞ்சல் வாக்களிக்க விண்ணப்பம் - சத்யபிரத சாகு - chennai post vote

சென்னை: தமிழ்நாட்டில் அஞ்சல் மூலம் வாக்களிக்க இதுவரை இரண்டு லட்சத்து எட்டாயிரத்து 963 பேர் விண்ணப்பித்துள்ளதாகத் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு தகவல் தெரிவித்துள்ளார்.

more-than-2-lakh-people-applied-for-postal-voting
more-than-2-lakh-people-applied-for-postal-voting

By

Published : Mar 19, 2021, 6:35 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் 12ஆம் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவுபெற்றது. இந்நிலையில் தமிழ்நாட்டில் அஞ்சல் மூலம் வாக்களிக்க இதுவரை இரண்டு லட்சத்து எட்டாயிரத்து 963 பேர் விண்ணப்பித்துள்ளதாகத் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு தகவல் தெரிவித்துள்ளார்.

இவர்களில் 49 ஆயிரத்து 114 பேர் மாற்றுத் திறனாளிகள், 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் சுமார் 1.59 லட்சம் பேர் அஞ்சல் மூலம் வாக்களிக்க விண்ணப்பித்துள்ளதாகவும், தேர்தல் பணியில் ஈடுபடும் காவல் துறையினர் இதுவரை 35 ஆயிரம் பேர் அஞ்சல் மூலம் வாக்களிக்க விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 'ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தவர்கள் ஈபிஎஸ் - ஓபிஎஸ்'

ABOUT THE AUTHOR

...view details