கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில், தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் யாரும் அவசியம் இன்றி வெளியில் வரக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது.
தடை உத்தரவை மீறுபவர்களைக் கண்காணித்து, தமிழ்நாடு காவல்துறை நடவடிக்கை எடுத்துவருகிறது. காவலர்கள் தடை உத்தரவை மீறும் பொதுமக்கள் மீது வழக்குகள் பதிவு செய்து அவர்களைக் கட்டுப்படுத்திவருகின்றனர்.
இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்த 125 நாள்களில், காவல்துறை தடையை மீறியதாக, 9 லட்சத்து 08 ஆயிரத்து 446 பேரைக் கைதுசெய்து ஜாமினில் விடுவித்துள்ளது.
மேலும் 6 லட்சத்து 54 ஆயிரத்து 177 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 18 கோடியே 94 லட்சத்து 03 ஆயிரத்து 811 ரூபாய் வசூலித்துள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் மேலும் 6,986 பேருக்கு கரோனா உறுதி