மெரினா கடற்கரையை அழகுப்படுத்தும் நோக்கத்தோடு சென்னை உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, மெரினா கடற்கரையில் வியாபாரம் மேற்கொள்ள 900 கடைகளை சென்னை மாநகராட்சி ஒதுக்கவுள்ளது. இதை அ, ஆ என இரண்டாகப் பிரித்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
கடை ஒதுக்கீடு
அ என்ற அடிப்படையில் 900 கடைகளில் 60 விழுக்காடு கடைகள் என 540 கடைகளும் ஏற்கனவே இருந்தவர்களுக்கு ஒதுக்கப்படும். ஆ என்ற அடிப்படையில், 40 விழுக்காடு கடைகள் என 360 கடைகள் புதிதாக அமைக்க குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும்.
இதற்கான விண்ணப்பம் டிசம்பர் 14ஆம் தேதி முதல் 26ஆம் தேதிவரை வழங்கப்பட்டது. பெறப்பட்ட விண்ணப்பங்கள் டிசம்பர் 29 முதல் 31 வரை பரிசோதனை செய்யப்பட்டன.