தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் 3 நாள்களில் ரூ.13 லட்சம் பறிமுதல் - நகர்புற உள்ளாட்சித் தேர்தல் 2022

சென்னையில் பறக்கும் படையினரால் கடந்த 3 நாள்களில் 13 லட்சத்து 74 ஆயிரத்து 710 ரூபாய் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

13 லட்சத்திற்கும் மேலான பணம் மற்றும் லேப்டாப் கைபேசி போன்ற பொருட்கள் பறிமுதல்
13 லட்சத்திற்கும் மேலான பணம் மற்றும் லேப்டாப் கைபேசி போன்ற பொருட்கள் பறிமுதல்

By

Published : Jan 30, 2022, 8:00 PM IST

சென்னை:நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு சென்னையில் தேர்தல் நடத்தை விதிகளை மீறாமல் தடுக்க 45 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தப் பறக்கும் படைகள் சென்னையில் கடந்த ஜனவரி 28ஆம் தேதி முதல் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் ரோந்துப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

தனிநபர் ஒருவர் ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் எடுத்துச் செல்லக் கூடாது, அதேபோல் 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள பரிசுப் பொருள்கள் எடுத்துச் சென்றால் பறிமுதல் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் சென்னையில் கடந்த 3 நாள்களில் 2 லட்சத்து 24 ஆயிரத்து 710 ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் 11 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 15 மடிக்கணினி மற்றும் 40 செல்லிடப்பேசிகள் பறக்கும் படையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மொத்தமாக 13 லட்சத்து 74 ஆயிரத்து 710 ரூபாய் மதிப்பிளான ரொக்கம் மற்றும் லேப்டாப் கைபேசி போன்ற பொருள்கள் உரிய ஆவணம் இல்லாத காரணத்திற்காகப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகச் சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்தில் இருவர் உயிரிழப்பு - ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்த முதலமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details