தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் 1.31 கோடி மதிப்பிலான பொருள்கள், பணம் பறிமுதல்

சென்னையில் சுமார் ரூ.1.31 கோடி மதிப்பிலான பொருள், பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல்செய்யப்பட்டது.

சென்னையில் 1.31 கோடி மதிப்பிலான பொருட்கள் மற்றும் பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல்
சென்னையில் 1.31 கோடி மதிப்பிலான பொருட்கள் மற்றும் பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல்

By

Published : Feb 2, 2022, 2:02 PM IST

சென்னை:தலைநகர் சென்னையில் பறக்கும் படையினரால் கடந்த ஆறு நாள்களில் ஒரு கோடியே 31 லட்சத்து இரண்டாயிரத்து 810 ரூபாய் பொருள்கள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளன.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு சென்னையில் தேர்தல் நடத்தை விதிகளை மீறாமல் தடுக்க 45 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பறக்கும் படைகள் சென்னையில் கடந்த ஜனவரி 27ஆம் தேதிமுதல் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் ரோந்துப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன.

பறக்கும் படையினரின் அதிரடி சோதனை

தனிநபர் ஒருவர் 50 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் எடுத்துச் செல்லக் கூடாது, அதேபோல் 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள பரிசுப் பொருள்கள் எடுத்துச் சென்றால் பறிமுதல்செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் சென்னையில் கடந்த ஆறு நாள்களில் ஐந்து லட்சத்து 810 ரூபாய் ரொக்கப் பணம் பறிமுதல்செய்யப்பட்டுள்ளது.

மேலும் உரிய ஆவணம் இல்லாத 54 மடிக்கணினிகள் , 44 கைப்பேசிகள், வெளிநாட்டு சிகரெட் என ஒரு கோடியே 26 லட்சத்து இரண்டாயிரம் மதிப்புள்ள பொருள்களையும் பறக்கும் படை பறிமுதல் செய்துள்ளது.

மொத்தம் சென்னையில் கடந்த ஆறு நாள்களில் ஒரு கோடியே 31 லட்சத்து இரண்டாயிரத்து 810 ரூபாய் மதிப்பிலான பொருள்கள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: தேர்தல் பணி; தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது - உயர் நீதிமன்றம்

ABOUT THE AUTHOR

...view details