சென்னை:இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்களின் தரப்பு வழக்கறிஞர் செய்தியாளர்களிடம் பேசுகையில்," சென்னை மாதவரம் பகுதியைச் சேர்ந்த சத்யநாராயணன் என்பவர் அதிமுகவில் பிரமுகராக இருப்பதாக கூறப்படுகிறது. அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவின் நெருங்கிய நண்பர் என அப்பகுதி மக்களிடம் அவர் தெரிவித்துள்ளார். மேலும், கூட்டறவுத் துறையில் வேலை வாங்கித்தருவதாகவும் சிலரிடம் ஆசை வார்த்தை காட்டியுள்ளார். அதை நம்பி சுமார் 10க்கும் மேற்பட்ட பெண்கள் தலா 20 லட்சம் ரூபாயை அவரிடம் கொடுத்துள்ளனர்.
பணம் கொடுத்தவர்களை நம்ப வைப்பதற்காக செல்லூர் ராஜு அதிமுக லெட்டர் பேடில் எஉங்களுக்கு வேலை கிடைத்துவிட்டதாக செல்லூர் ராஜு எழுதியதைப் போல் அதிமுக லேட்டர் பேடை காட்டியுள்ளார். தொடர்ந்து வேலை வழங்கிய அமைச்சருக்கு நன்றி தெரிவித்து நாளிதழ்களில் விளம்பரமும், சுவரொட்டிகளும் சத்யநாராயணன் கூறியுள்ளார். அதையும் கேட்டு தங்களது சொந்த செலவில் பாதிக்கப்பட்டவர்கள் விளம்பரம் செய்துள்ளனர்.