இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்தர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "கடந்த சில தினங்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் தென் மேற்கு பருவ மழை பரவலாக பெய்துள்ளது.
கடந்த ஜூன் 1ஆம் தேதி முதல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பதிவான மழையின் அளவு 38செ.மீ ஆகும். இந்த காலகட்டத்தில் இயல்பான மழையின் அளவு 33செ.மீ. இயல்பான அளவைவிட16 விழுக்காடு அதிகமாக மழை பெய்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை பதிவான மழையின் அளவு 59 செ.மீ. இந்த காலகட்டத்தில் இயல்பு அளவு 42 செ.மீ. இயல்பைவிட 39 விழுக்காடு அதிகமாக மழை பெய்துள்ளது.