மூப்பனார் குடும்பம் தஞ்சாவூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற விவசாயக் குடும்பமாக இருந்தது. காங்கிரசின் மூத்த தலைவராக இருந்த அவர், அரசியல் பொது வாழ்க்கையில், தூய்மை, நேர்மை வளமான தமிழ்நாட்டை வலிமைப்படுத்த மற்ற தலைவர்களின் செயல்பாடுகளில் இருந்து மாறுபட்டு காணப்பட்டார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்த மூப்பனார் மறைந்து இன்றுடன் 18 ஆண்டுகள் நிறைவடைகிறது.
இந்த நிலையில், சென்னை தி.நகரில் உள்ள அவரது நினைவிடத்தில், பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழிசை, அரசியலில் தூய்மையை கடைபிடித்தவர் மூப்பனார். அவரின் மகன் வாசனும் அவ்வாறே அரசியலில் தூய்மையை கடைபிடித்து வருகிறார் என்று தெரிவித்தார்.