தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை - 15 ஐஏஎஸ் அலுவலர்கள் நியமனம் - பருவமழை முன்னெச்சரிக்கை

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மண்டலத்துக்கு ஒரு ஐஏஎஸ் அலுவலர் என 15 அலுவலர்களை நியமித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை

By

Published : Jun 26, 2022, 5:57 PM IST

சென்னையில் பருவமழை வரவிருக்கும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒரு மண்டலத்திற்கு ஒரு ஐஏஎஸ் அலுவலர் வீதம் 15 ஐஏஎஸ் அலுவலர்களை அரசு நியமித்துள்ளது. இந்த அலுவலர்கள் அவரவர் மண்டலத்தில் நடைபெறும் மழைநீர் வடிகால் மற்றும் இதரப்பணிகள் எவ்வாறு செல்கிறது என்பதைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

அதுமட்டுமில்லாமல் மழைநீர் வடிகால் பணியின்போது பொதுமக்களுக்கும் வாகனத்தில் செல்பவர்களுக்கும் எந்த ஒரு தொந்தரவும் வராதபடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைநீர் வடிகால் அந்தப் பகுதியில் எவ்வாறு இணைத்திருக்கிறார்கள் என்பது குறித்தும்; புதிதாக இணைப்புகள் இணைப்பது குறித்தும் அங்கு இருக்கும் அலுவலர்களுடன் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆள்கள் நியமிப்பது, பொதுமக்களை தங்க வைப்பதற்கான கட்டடம், பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் என அனைத்தும் தயார் நிலையில் வைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு

ABOUT THE AUTHOR

...view details