தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குரங்கம்மை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடந்துவருகிறது - மா சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் குரங்கம்மை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 4 மாவட்டங்களில் படுக்கை வசதிகளும், பன்னாட்டு விமான நிலையங்களில் பரிசோதனை மையங்களும் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

குரங்கம்மை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம் - மா.சுப்பிரமணியன்
குரங்கம்மை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம் - மா.சுப்பிரமணியன்

By

Published : Jul 30, 2022, 9:35 PM IST

சென்னை: சைதாப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் ரோட்டரி கிளப் சார்பில் மகளிருக்கான ஆரம்ப நிலை புற்றுநோய் கண்டறியும் சிறப்பு முகாமை நடைபெற்றது. இதனை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், "முதலமைச்சர் பதவியேற்ற பின் புற்றுநோய்களுக்கான நடவடிக்கைகள் சிறப்பாக எடுக்கப்பட்டு வருகிறது. இன்னும் ஓராண்டில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் திறக்கப்பட உள்ளது.

தமிழ்நாட்டில் குரங்கம்மை பாதிப்பு இல்லை. அவ்வாறு இருந்தால் கட்டாயம் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும். அதுமட்டுமின்றி குரங்கம்மை வரவே வராது என்று கூறவில்லை. 77 நாடுகளில் குரங்கம்மை பாதிப்பு உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

அதேபோல் சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 4 மாவட்டங்களில் இதற்கென படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி பன்னாட்டு விமான நிலையங்களில் பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:ஆன்லைன் ரம்மிக்கு தடை சட்டம்; தலைமை செயலாளர் ஆலோசனை

ABOUT THE AUTHOR

...view details