தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'குரங்கு அம்மை - கொப்பளம் இருந்தால் தனிமைப்படுத்த வேண்டும்' - அலெர்ட் செய்த ராதாகிருஷ்ணன்! - Secretary of the Department of Health

அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு, அரியவகை கொப்புளங்கள் ஏற்பட்டால் உடனடியாக தனிமைப்படுத்த வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

குரங்கு அம்மை- கொப்பளம் இருந்தால் தனிமைப்படுத்த வேண்டும்
குரங்கு அம்மை- கொப்பளம் இருந்தால் தனிமைப்படுத்த வேண்டும்

By

Published : May 23, 2022, 10:37 PM IST

சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச்செயலாளர் ராதாகிருஷ்ணன், குரங்கு அம்மை குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் ,

’உலக சுகாதார நிறுவனம் குரங்கு அம்மை பல நாடுகளில் பரவி வருவதாக அறிவித்துள்ளது. இதையடுத்து தேசிய நோய் தடுப்பு மையத்தின் அறிவுறுத்தலின்படி, பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

அதன்படி இதுவரை கண்டறியப்படாத தோலில் ஏற்படும் கொப்புளங்கள் உடையவர்களையும், அமெரிக்கா, இங்கிலாந்து ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், கனடா, போர்ச்சிகல், ஸ்பெயின், சுவீடன் நாடுகளில் இருந்து கடந்த 21 நாட்களுக்கு முன்னர் தமிழ்நாடு வந்த பயணிகளில் குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டவர்கள் அல்லது அறிகுறி உள்ளவர்களும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும், தனிமைப்படுத்தி உயர்தர சிகிச்சை அளிக்க வேண்டும்.

அவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறவர்கள் குறித்து ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு குழுமத்தின், மாவட்ட கண்காணிப்பு அலுவலர்களுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். தொற்று நோய்ப் பாதுகாப்பு வழிமுறைகளை உடனடியாக குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்ட அல்லது அறிகுறி கொண்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும்போது நடைமுறைப்படுத்தவேண்டும்.

பாதிக்கப்பட்டவர்களின் ரத்தம், சளி மற்றும் கொப்புளங்களின் மாதிரிகள் உடனடியாக பூனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்துக்கு குரங்கு அம்மை ஆய்வுக்காக அனுப்பப்பட வேண்டும்.

அந்த ஆய்வில் குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்டால், கடந்த 21 நாட்களுக்கு அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை உடனடியாக கண்டறிந்து தனிமைப்படுத்த வேண்டும். பாதுகாப்பு வழிமுறைகளை உரிய கவனத்துடன் பின்பற்றி தொடர் கண்காணிப்பை உறுதி செய்ய வேண்டும்’ என அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:போதை பொருள் தடுப்பு மையங்கள் அங்கீகாரம் பெற்றவையா எனப் பார்க்கவேண்டும் - ராதாகிருஷ்ணன்

ABOUT THE AUTHOR

...view details