சென்னை:சென்னை மத்திய குற்றப்பிரிவில் புலன் விசாரணையின் போது கைப்பற்றப்படும் வழக்கு சொத்துக்களைக் காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள (மல்கானா) பாதுகாப்பு பெட்டக அறையில் கடந்த 31.08.2019 முதல் பாதுகாப்பாக வைக்கப்பட்டு வருகிறது. இது வழக்கு சொத்துக்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்கும் வரையிலான இடைப்பட்ட காலத்திலும், நீதிமன்றத்தில் ஒப்படைத்த பின் மீண்டும் புலன் விசாரணையின் அதிகாரியின் பாதுகாப்பில் ஒப்படைக்கப்படும் வரை வழக்கின் சொத்துக்கள் பாதுகாக்கப்பட்டுவரும்.
இந்நிலையில்,அதன் சாட்சிய மதிப்பு மாறாமலிருக்கும் வகையில், அச்சொத்துக்கள் நீதிமன்ற தீர்ப்பின் மூலம் முடித்து வைக்கும் வரையில் (மல்கானா) பாதுகாப்பு பெட்டக அறையில் வைத்துப் பாதுகாக்கப்படுகிறது. இப்பொழுது, இந்த பாதுகாப்பு பெட்டக அறையில் 403 வழக்குகளில் சம்பந்தப்பட்ட 44 வகையான விலையுயர்ந்த பொருட்கள், ஆவணங்கள் உட்பட 2925 வழக்கு சொத்துக்கள் வைக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு பெட்டக அறையில் அதிக அளவிலான சாட்சிய பொருட்கள் கைப்பற்றப்பட்டுப் பாதுகாக்கப்படுவதாலும், புலன் விசாரணை அதிகாரிகள் மாறி புதிய புலன் விசாரணை அதிகாரிகள் பொறுப்பு மாறுகின்றன.இதனை நீண்ட காலமாகப் பாதுகாக்கப்பட்டு வருவதால் அவற்றை அந்த சொத்துக்கள் வழக்கு எண் வரிசையில் அடையாளம் காணுதல் மற்றும் சொத்துக்கள் புலன் விசாரணை அதிகாரியின் பொறுப்பில் உள்ளதா அல்லது நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறதா என்று தெரியவேண்டும்.
அப்படியெனில், யாரால்? எப்போது? போன்ற விவரங்கள் மற்றும் வழக்கு சொத்துக்கள் அடிக்கடி நீதிமன்றத்திற்கும் எடுத்துச் சென்று திரும்பக் கொண்டு வந்து ஒப்படைக்கப்படுவது போன்ற பல காரணங்களாலும் இதை முறையாகப் பராமரித்தல் பெரும் சவாலாகவே சென்னை காவல்துறைக்கு இருந்துள்ளது.