சென்னை:ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு, கண்காணிப்புக் குழுவிற்கு தலைவராக முதலமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார்.
உறுப்பினர்களாக நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர், சுற்றுலாத்துறை அமைச்சர் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற, சட்டப்பேரவை பிரதிநிதிகளும் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஆண்டிற்கு இருமுறை அதாவது ஜனவரி, ஜூலை ஆகிய மாதங்களில் ஆய்வு நடைபெறவுள்ளது.
இதன் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு நீதி கிடைப்பதற்கான உரிமையை நிலை நாட்டப்படும் என ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:திமுகவில் இணைந்த அதிமுக மகளிரணி செயலாளர்