சென்னை: அனகாபுத்தூர் பாலாஜி நகரைச் சேர்ந்தவர் கோபிநாத் (36). இவர் அமைந்தகரை அருகே கண்ணப்பன் தெருவில் டீக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று (ஜுன் 18) மாலை கடையை பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்ற கோபிநாத், இன்று (ஜுன் 19) காலை கடைக்கு வந்துள்ளார்.
அப்போது, கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்சியடைந்த அவர், உள்ளே சென்று பார்த்தபோது கல்லாப் பெட்டியிலிருந்த 9 ஆயிரம் ரூபாய் பணம் திருடுபோனது தெரியவந்தது.
டீ கடை பூட்டை உடைத்து ரூ.9 ஆயிரம் திருட்டு இதையடுத்து, கோபிநாத் தனது கடையிலுள்ள கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வு செய்தபோது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கடையின் பூட்டை உடைத்து பணத்தை திருடிச் செல்வது பதிவாகியிருந்தது. உடனடியாக, கோபிநாத் இது குறித்து அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகள் உதவியுடன் குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: மணல் கடத்திய நான்கு பேருக்கு சிறை!