சென்னை: தாம்பரம் அடுத்த இரும்புலியூர் பழைய ஜி.எஸ்.டி சாலையில் செல்போன், பால், மீன் உள்ளிட்ட கடைகள் இயங்கி வருகின்றன.
அடுத்தடுத்த கடைகளில் திருட்டு
இங்கு, ஜூலை 18ஆம் தேதி இரவு விஜயகுமார் என்பவருக்குச் சொந்தமான மீன் கடையிலிருந்து 2 பழைய செல்போன், சுப்புராயன் என்பவர் கடையில் 3ஆயிரத்து 500 ரூபாய் பணம், கணேஷ் பாபு என்பவர் பால் கடையில் 5ஆயிரம் ரூபாய் பணம், தமீம் அன்சாரி என்பவர் செல்போன் கடையில் 10 பழைய செல்போன்கள், ஸீப்பிக்கர் பாக்ஸ் உள்ளிட்டவைகள் திருடு போயுள்ளன.
இதனைக் கண்டு அதிர்சியடைந்த கடை உரிமையாளர்கள் இது குறித்து சேலையூர் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்னர். பின்னர், அங்கு சென்ற காவல் துறையினர், அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வு செய்தனர்.
சிசிடிவி மூலம் விசாரணை
அதில், ஒரு இளைஞர் தன் கையில் இரும்பு கம்பி வைத்துக்கொண்டு கடை வீதியில் நின்று நோட்டமிடுவதுபோன்ற காட்சியில் பதிவாகியிருந்தது. மேலும், அப்பகுதியில் காவல் துறையினர் நடத்திய சோதனையில், ரயில்வே தண்டவாளத்தின் அருகே இளைஞர் பயன்படுத்திய இரும்பு கம்பி இருந்ததைக் கண்டறிந்தனர். அதனைக் கைப்பற்றிய் காவல் துறையினர், மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: போலி நகைகளை வைத்து தங்க நகைககள் திருடிய பெண்கள் கைது