சென்னை: மத்திய குற்றப்பிரிவில் கருணாகரன் என்பவர் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்தப் புகாரில், சேலம் மாவட்ட சட்டப்பேரவைத் தொகுதியில் 2016ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது சட்டப்பேரவை உறுப்பினர் சீட் வாங்கித் தருவதாகக் கூறி சுமார் ஐந்து கோடி ரூபாயைப் பெற்றுக்கொண்டு சீட் வாங்கித் தராமலும், வாங்கிய பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றியது சம்பந்தமாக இளவரசியின் இரண்டாவது மருமகனான ராஜராஜன் மீது புகார் தெரிவித்திருந்தார்.
தான் அளித்த புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, அவர் மீது வழக்குப் பதிவுசெய்து நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை எழும்பூர் 14ஆவது நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்செய்தார்.