தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

20 பவுன் நகைக்கு ஆசைப்பட்டு ரூ. 3.80 லட்சத்தை இழந்தவர்! - சென்னை பணம் மோசடி

சென்னை: கொரட்டூரில் அடகு வைத்த 20 பவுன் நகைகளை, ரூ.3.80 லட்சம் கொடுத்து திருப்பச்சென்ற ஊழியரை ஏமாற்றி நூதன முறையில் பணத்தை அபேஸ் செய்த இரண்டு பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

money fraudulent case in chennai
நூதன முறையில் பணத்தை திருடிச்சென்ற குற்றவாளிகள்

By

Published : Dec 18, 2019, 11:00 PM IST

சென்னை ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் சோழன் நகரைச் சேர்ந்தவர் கவுதம்(26). இவர் போரூர் காரம்பாக்கத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். கடந்த சில நாள்களுக்கு முன்பு, இவரது வீட்டிற்கு 20 பவுன் நகைகள் அடகு வைத்திருப்பதை, மூன்று லட்சத்து 80ஆயிரம் ரூபாய் கட்டி திருப்பிச் செல்லுமாறு ரசீது ஒன்று வந்துள்ளது.

இதனைக்கண்ட கவுதம், தான் எந்த நகையும் அடகு வைக்கவில்லை, தவறுதலாக வந்திருக்கலாம் என எண்ணியுள்ளார். பின்னர், கவுதம் செல்ஃபோனுக்கு அழைப்பு விடுத்த இரண்டு நபர்கள், தாங்கள் நிதி நிறுவன ஊழியர்கள் எனக்கூறி, தங்களுடைய 20 பவுன் நகைகளை திருப்பிக்கொள்ளுமாறு கேட்டுள்ளனர்.

இதனைக் கேட்டு சற்று சிந்தித்த கவுதம், 20 பவுன் நகைகளுக்கு வெரும் மூன்று லட்சத்து 80ஆயிரம் ரூபாய் கொடுத்தால் போதும் நமக்கு நகைகள் கிடைத்துவிடும், வந்த ஆஃபரை விடக்கூடாது என்று எண்ணிய கவுதம் அவர்கள் கூறிய விலாசமான கொரட்டூர் ரயில்வே நிலையம் அருகே பணத்துடன் சென்றுள்ளார்.

அங்கே, வந்த இரண்டு நபர்கள், தாங்கள் நகைகள் அடகு வைத்திருக்கும் கடை பூட்டியுள்ளதாகவும் கடையின் அருகிலேயே கடையின் உரிமையாளர் வீடு உள்ளது. அங்கு சென்று நகைகளை வாங்கி வருகிறோம் பணத்தை கொடுங்கள் எனக்கூறி பணத்தைப் பெற்றுக்கொண்டு இரு சக்கர வாகனத்தில் சென்றனர்.

பணத்தை திருடிச்சென்ற விஜயகுமார், ஜெகன்

பல மணி நேரம் ஆகியும் திரும்பவில்லை. அவர்களது செல்ஃபோனுக்கு அழைப்புவிடுத்த கவுதமால் அவர்களை தொடர்பு கொள்ள இயலவில்லை. பின்னர், தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து அம்பத்தூர் உதவி கமிஷனர் கண்ணன், ஆய்வாளர் ஜெகதீசன் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைத்து அடையாளம் தெரியாத நபர்களை தேடி வந்தனர். காவல் துறையினரின் தீவிர தேடுதல் வேட்டையில் அந்த இரு ஆசாமிகளும் சிக்கினர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் அம்பத்தூரைச் சேர்ந்த விஜயகுமார்(27), அமைந்தகரையைச் சேர்ந்த ஜெகன்(21) என்பது தெரியவந்தது.

மேலும், இருவரும் வெளிநாடு செல்வதற்கு பணம் தேவைப்பட்டதால் அடகு வைத்த நகைகளை மீட்டு தருவதாக போலியாக ஒரு ரசீதை தயாரித்து கவுதமுக்கு அனுப்பி பணத்தை எடுத்து வரச்சொன்னதாகவும் இதனை நம்பி அவர் பணத்தை கொண்டு வந்தவுடன் அவரை ஏமாற்றி பணத்தை எடுத்துச் சென்றதாக வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

நூதன முறையில் பணத்தை திருடிச்சென்ற குற்றவாளிகள்

இதையடுத்து, அவர்களிடமிருந்து ரூ.3.80 லட்சம் பணத்தை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்களிடமிருந்து இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வெளிநாடு செல்ல ஆசைப்பட்டு நூதன முறையில் பணத்தை பறித்துச் சென்றவர்கள் தற்போது சிறையில் உள்ளனர்.

இதையும் படிங்க: 'யூ டியூப்பில் விளம்பரம் பார்த்தால் பணம்' - நூதன மோசடியில் ஈடுபட்ட பி.இ., பட்டதாரிகள் கைது!

ABOUT THE AUTHOR

...view details