சென்னை:கடந்த அதிமுக ஆட்சியில் வணிகவரித்துறை மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சராக இருந்த கே.சி.வீரமணி, சுகாதாரத்துறை, பள்ளிக் கல்வித்துறை, தமிழ் வளர்ச்சித்துறை, இளைஞர் மேம்பாடு மற்றும் விளையாட்டுத் துறை என 5 துறைகளில் அமைச்சராகப் பொறுப்பு வகித்துள்ளார்.
இந்நிலையில், அமைச்சராகப் பொறுப்பு வகித்து வந்தபோது கே.சி.வீரமணி, வருமானத்துக்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக பல்வேறு புகார்கள் எழுந்தன.
இதையடுத்து திமுக ஆட்சியமைத்த உடன் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கிய முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் சோதனை நடத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து தற்போது முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்குச் சொந்தமான 35 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று (செப்.16) ஒரே நேரத்தில் சோதனை மேற்கொண்டனர்.