சென்னை அண்ணா ஆர்ச் துரைசாமி தெருவைச் சேர்ந்தவர் கோவிந்த குமார், இவருடன் பல வட மாநிலத் தொழிலாளர்கள் கட்டிட வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் (மார்ச்12) இரவு ஓட்டேரி கண்ணப்பன் தெருவில் சுமார் 30க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் கட்டிட வேலை செய்து வந்துள்ளனர்.
இதனிடையே, நேற்று முன்தினம் இரவு பணியை முடித்துவிட்டு அங்கேயே வட மாநிலத் தொழிலாளர்கள் தங்கியுள்ளனர். இந்நிலையில், நேற்று காலை எழுந்து பார்த்தபோது அவர்கள் வைத்திருந்த சுமார் ரூ.24 ஆயிரம் ரொக்கம், 4 செல்போன் திருட்டு போனது தெரியவந்தது.