சென்னை திருவான்மியூர் பகுதியில் தனியார் நிறுவனத்தால் ஐந்து நாட்கள் நடைபெறும் பதினோராவது கதக்களி தொடக்க விழாவில் தமிழ் ஆட்சி மொழி தமிழ்ப்பண்பாடுத் துறை அமைச்சர் கே. பாண்டியராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கலை, பண்பாடு ஆகியவற்றை வளர்க்கும் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு உறுதுணையாக இருக்கும் என்றார்.
ரஷ்யாவில் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்று வந்த இளவேனில் வாலறிவன் என்ற மாணவியை வரவேற்க எந்த அமைச்சரும் முன் வரவில்லையே...? என்ற கேள்விக்கு, "இளவேனில் வாலறிவன் வருகின்ற செய்தி யாருக்கும் தெரியாது. தெரிந்திருந்தால் அமைச்சர்கள் நிச்சயம் சென்றிருப்பார்கள். அவர்களை 24 மணி நேரத்திற்குள் நான் சந்திப்பேன்" என பதில் அளித்தார்.
தமிழக தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேட்டி இந்து அறநிலையத் துறையை நீக்கிவிட்டு திராவிட அறநிலையத் துறை என்று வைக்க வேண்டும் என்ற திருமாவளவன் கருத்துக்கு, 'திராவிடம் என்பதே ஒரு சமஸ்கிருதச் சொல் - அதற்குப் பதிலாக பாரத அறநிலையத் துறை என்று வேண்டுமானால் பெயர் வைத்துக் கொள்ளலாம்' என கே. பாண்டியராஜன் பதிலளித்தார்.