தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘மோடியின் வெறுப்பு அரசியல்தான் மணிப்பூர் கலவரத்திற்கு காரணம்’ - கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு! - K Balakrishnan

மோடியின் வெறுப்பு அரசியல்தான் மணிப்பூர் கலவரத்திற்கு காரணம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.

manipur-riots-caused-by-modis-politics-of-hate-k-balakrishnan-accused
மோடியின் வெறுப்பு அரசியல்தான் மணிப்பூர் கலவரத்திற்கு காரணம்; கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு

By

Published : Jul 21, 2023, 6:48 PM IST

செய்தியாளர்களைச் சந்தித்த கே.பாலகிருஷ்ணன்

சென்னை: கடந்த இரண்டரை மாதங்களாக மணிப்பூரில் உள்ள மைத்தேயி மற்றும் குக்கி சமூகத்தினருக்கு இடையே வன்முறை மோதல்கள் நிலவி வருகின்றன. இந்த நிலையில், நேற்று முன்தினம் (ஜூலை 19) குக்கி சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்ற கொடூரமான வீடியோ வெளியாகி நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்து வருகிறது.

இது குறித்து சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், "மணிப்பூரில் 2 பெண்களுக்கு ஏற்பட்டுள்ள கொடுமைக்கு இந்தியா மட்டும் அல்ல உலகம் முழுவதும் கண்டனம் எழுந்துள்ளது. 2 மாதங்களாக அந்த குற்றவாளிகளை கைது செய்யவில்லை. ஊடகத்தில் வெளி வந்த பிறகுதான் கைது செய்கிறார்கள். வெளி உலகத்திற்கு எதையும் சொல்லக் கூடாது என்றுதான் செயல்படுகிறார்கள்.

நாடாளுமன்ற கூட்டத்தில் இது தொடர்பாக விவாதம் செய்ய சொன்ன பொழுது, இதை இப்போது விவாதிக்க தேவையில்லை. நேரம் வரும்போது விசாரிப்போம் என்கிறார்கள். இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்கவே மோடி அரசு தயங்குகிறது. மோடியின் வெறுப்பு அரசியல்தான் இந்த சம்பவத்திற்கு காரணம். அவர்களின் அரசியலுக்காக மக்களை மோத விடுகிறார்கள். மார்க்சிஸ்ட் கம்யூ. சார்பில் நாளை (ஜூலை 22) முதல் பல்வேறு இடங்களில் இதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம்.

இதையும் படிங்க:மணிப்பூர் விவகாரம்: சென்னை மீனம்பாக்கத்தில் ரயில் மறியலில் ஈடுபட்ட மாணவர்கள்!

வரும் 23 ஆம் தேதி மதுரையில் சிபிஎம் சார்பில் மாநில உரிமை பாதுகாப்பு மாநாடு நடைபெற உள்ளது. இதில் பல்வேறு முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இதில் முக்கியமான தீர்மானங்களை நிறைவேற்ற இருக்கிறோம். பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்களை செயல்படவிடாமல் தடுப்பது, ஆளுநர் ஒப்புதல் கொடுக்காமல் இருப்பது, மாநில அரசை முடுக்குவது உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது.

நேற்றைக்கு கூட ஆளுநர் ஆர்.என்.ரவி புதிய கல்விக் கொள்கை குறித்து கருத்து தெரிவிக்கிறார். திமுகவை பணிய வைக்கும் செயலாகத்தான் மார்சிஸ்ட் கம்யூ. கட்சி அமலாக்கத்துறையின் சோதனையை பார்க்கிறது. இந்தியாவிலேயே அதிக ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான கட்சி பாஜகதான். தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் சேரும் இந்த நேரத்தில் திட்டமிட்டு இவ்வாறு செயல்படுகின்றனர். இது மக்களின் கோவத்திற்கு தான் ஆளாக்கும். பாஜக திட்டமிட்டு மாநில அரசின் உரிமையை சுருக்குவது, ஆளுநரை பயன்படுத்துவது, அமலாக்கத்துறையை பயன்படுத்துவது என பல்வேறு மோசமான செயல்களை செய்து வருகிறது.

நாடாளுமன்ற கூட்டத்தில் பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றுவதாக அறிவித்துள்ளனர். இது மத ரீதியாக மக்களை பிளவுபடுத்தும். பொது சிவில் சட்டத்தை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூ. சார்பில் மாநிலம் முழுவதும் பரப்புரை செய்ய இருக்கிறோம். மணிப்பூரில் மாநில முதலமைச்சர் அங்கே ஆட்சி செய்ய அறுகதையற்றவர். விவாதம் நடத்தமலேயே நாடாளுமன்ற கூட்டம் முடிந்து விடுகிறது. பாஜக அரசு அதைதான் விரும்புகிறது. பாஜக நாடாளுமன்றத்தை ஒத்திவைக்க இதை பகடைக் காயாக பயன்படுத்துகிறது" என குற்றம் சாட்டினார்.

இதையும் படிங்க :மணிப்பூர் கலவரத்தை கண்டித்து மலை மீது ஏறி போராட்டம்; பரபரப்பைக் கிளப்பிய பட்டறைத் தொழிலாளர்கள்!

ABOUT THE AUTHOR

...view details