தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘எழுவர் விடுதலை குறித்து பிரதமர் அறிவிப்பார்’ - அமைச்சர் பாண்டியராஜன் - எழுவர் விடுதலை குறித்து பிரதமர் அறிவிப்பார்

சென்னை: எழுவர் விடுதலை குறித்த முடிவை தமிழ்நாட்டுக்கு வருகைபுரியும்போது பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பார் என அமைச்சர் பாண்டியராஜன் உறுதியளித்துள்ளார்.

மாஃபா பாண்டியராஜன்
மாஃபா பாண்டியராஜன்

By

Published : Feb 5, 2021, 11:45 AM IST

தமிழ்நாடு முழுவதும் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றுவருகிறது. அந்த வகையில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் உயிர்நீத்த வீரர்களுக்கு அதிமுக சார்பில் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் அலெக்ஸ்சாண்டர் தலைமையில் நடைபெற்றது.

இதற்குச் சிறப்பு அழைப்பாளர்களாக ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின், தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப்பண்பாடுத்துறை அமைச்சர் பாண்டியராஜன் ஆகியோர் கலந்துகொண்டு உயிர்நீத்த வீரர்களுக்கு மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினர். கூட்ட முடிவில் மாற்றுக் கட்சிகளிலிருந்து 100-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பாண்டியராஜன், “எழுவர் விடுதலை ஆளுநர் நிராகரிக்கவில்லை, குடியரசுத் தலைவர் வழியாக முடிவு தெரியவரும்.

தமிழ்நாட்டிற்கு வரும் பிரதமர் நரேந்திர மோடி இதனை அறிவிப்பார்” என்றார். மேலும், இந்த விவகாரத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: அமைச்சர் விஜயபாஸ்கர் கோரிக்கையை ஏற்றுப் போராட்டம் வாபஸ்!

ABOUT THE AUTHOR

...view details