தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அமித் ஷா, மோடியை, கிருஷ்ணன் - அர்ஜுனனுடன் ஒப்பிட்ட ரஜினி...! - பாஜக

சென்னை: கிருஷ்ணன், அர்ஜுனன் போன்று அமித் ஷாவும், மோடியும் செயல்பட்டு வருகின்றனர் என நடிகர் ரஜினி புகழாரம் சூட்டியுள்ளார்.

rajini kanth

By

Published : Aug 11, 2019, 3:50 PM IST

குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவின் 'கேட்டல், கற்றல், வழிநடத்துதல்' என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்றது.

இதில், குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, உள் துறை அமைச்சர் அமித் ஷா, தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அப்போது நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில், "குடியரசு துணைத் தலைவராக இரண்டு ஆண்டுகள் முடித்துள்ள வெங்கையா நாயுடுவுக்கு வாழ்த்துகள். இந்த நிகழ்ச்சி சென்னையில் நடத்துவது நமக்கு பெருமை.

வெங்கையா தெரியாமல் அரசியல்வாதி ஆகிவிட்டார். ஏன் என்றால் அவர் முழுமையான ஆன்மிகவாதி என்பதை நான் புரிந்துகொண்டுள்ளேன்.

மிஷன் காஷ்மீர் வெற்றியை சிறப்பாக செயல்படுத்தியதற்காக அமித் ஷாவுக்கு பாராட்டுக்கள் என்றார்.

ABOUT THE AUTHOR

...view details