தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் நாளை மிதமான மழைக்கு வாய்ப்பு! - தமிழ்நாடு வானிலை

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Moderate
Moderate

By

Published : Feb 28, 2023, 5:24 PM IST

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று(பிப்.28) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழக கடலோர மாவட்டங்களில் மார்ச் 1ஆம் தேதி ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மார்ச் 2, 3ஆகிய தேதிகளில் வறண்ட வானிலையே நிலவக்கூடும். மார்ச் 4ஆம் தேதி, தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம் வலிநோக்கத்தில் 2 செ.மீ மற்றும் மண்டபம், ராமநாதபுரத்தில் தலா 1 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. கடலுக்குச் செல்லும் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளில் 70 புலிகள் உயிரிழப்பு.. வேட்டையாடப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா.?

ABOUT THE AUTHOR

...view details