சென்னை:இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன், "கிழக்கு திசை காற்று வங்க கடல் மற்றும் தென்னிந்திய பகுதிகளில் நிலை வரும் சூழ்நிலையில் வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகள் புதுவை, காரைக்கால் மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளில் இன்று முதல் துவங்கியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூரில் 8 சென்டி மீட்டரும், புதுச்சேரியில் 7 சென்டி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது. தற்போது தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் மற்றும் இலங்கையை ஒட்டியுள்ள பகுதியில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகிறது.
அடுத்த ஐந்து நாட்களில் தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த 24 மணி நேரத்தில் தெற்கு கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட வட தமிழ்நாடு, கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யும்.