சென்னை: திருவல்லிக்கேணியில் தன்னைத் தாக்கி செல்போனை திருடியதாக நாடகமாடி,செல்போன் திருடியவரே போலீசாரிடமிந்து தப்பித்து சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
திருவல்லிக்கேணி வல்லபா அக்ரஹாரம் தெருவில் தனியார் தங்கும் விடுதிக்கு எதிராக தாக்கப்பட்ட நிலையில் வாலிபர் ஒருவர் கிடந்துள்ளார். இது தொடர்பாக அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுக்க, சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
காவலர்களிடம் நாடகமாடி தப்பிய செல்போன் திருடன்!
திருவல்லிக்கேணி போலீசார் காயம்பட்ட நபரிடம் விசாரணை செய்ததில், அவர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த மோசஸ் என்பது தெரியவந்துள்ளது. போலீசார் விசாரணையில் தன்னை தாக்கி செல்போன் பறிக்கப்பட்டதாக மோசஸ் தெரிவித்துள்ளார்.
திருவல்லிக்கேணி போலீசார் காயம்பட்ட நபரிடம் விசாரணை செய்ததில், அவர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த மோசஸ் என்பது தெரியவந்துள்ளது. போலீசார் விசாரணையில் தன்னை தாக்கி செல்போன் பறிக்கப்பட்டதாக மோசஸ் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், காயம்பட்ட மோசஸ்தான் செல்போன் திருடன் என தெரியவந்தது. அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த நபரிடம் மோசஸ் செல்போனை திருடியதும், செல்போன் பறிகொடுத்தவர் நண்பர்களுடன் சேர்ந்து மோசஸை தாக்கி செல்போனை வாங்கி சென்றது சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. போலீசாரிடம் இருந்து தப்பிப்பதற்காக தன்னைத் தாக்கி செல்போனை பறித்து சென்றதாக மோசஸ் நாடகமாடியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்ய சென்றபோது ,மருத்துவமனையிலிருந்து தப்பித்துள்ளார். போலீசார் அவரை தேடி வருகின்றனர்.