மனித நேய மக்கள் கட்சி சார்பில் டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் தாம்பரம் சண்முகம் சாலையிலிருந்து, அஞ்சலகம் வரை பேரணி சென்றனர். மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் டிராக்டரில் பேரணியாக வந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டார்.
விவசாயிகளுக்கு ஆதரவாக தாம்பரத்தில் பேரணி சென்ற மனிதநேய மக்கள் கட்சியினர்! - mnmk party protest to support farmers
சென்னை: விவசாய சட்டங்களைத் திரும்பப் பெறவும், விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் தாம்பரத்தில் மனிதநேய மக்கள் கட்சியினர் பேரணியாகச் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை
பின்னர், தாம்பரம் அஞ்சலகம் முன்பு சுமார் 300-க்கும் மேற்பட்டோர் மனித நேய மக்கள் கட்சியினர் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.