தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டாஸ்மாக்கிற்கு கொடுக்கும் முக்கியத்துவம்கூட அங்கன்வாடிகளுக்கு கொடுப்பதில்லை - மநீம சினேகா மோகன்தாஸ் - வேளச்சேரி மழைநீர் வடிகால் அமைக்கும் பணி

டாஸ்மாக் இடத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவம் கூட அங்கன்வாடி மையங்களுக்கு கொடுப்பதில்லை என மக்கள் நீதி மய்யத்தின் மாநிலச்செயலாளர் சினேகா மோகன்தாஸ் தெரிவித்துள்ளார்.

மழைநீர் வடிகால் பணியால் பெரிய அளவில் பாதிப்படையும் வேளச்சேரி
மழைநீர் வடிகால் பணியால் பெரிய அளவில் பாதிப்படையும் வேளச்சேரி

By

Published : Oct 30, 2022, 10:26 PM IST

'வடகிழக்குப்பருவமழை தொடங்க இருக்கும் நிலையில் வேளச்சேரி பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி மந்தமாக நடைபெறுவதால் மக்கள் பெரிதும் பாதிப்படைகின்றனர். பொதுவாக, மழைக்காலத்தில் வேளச்சேரியில் ராம் நகர், மடிப்பாக்கம் உள்ளிட்டப்பகுதிகளில் மழைநீர் அதிகமாக தேங்கும். அதனைக்குறைப்பதற்காக வேளச்சேரி முழுவதும் பல்வேறு இடங்களில் புதிய மழைநீர் வடிகால் அல்லது சீரமைப்பு செய்து வருகிறது.

வேளச்சேரியில் மட்டும் சுமார் 6 கோடி ரூபாய்க்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், வேளச்சேரி பிரதான சாலை, காந்தி தெரு, சீதாபதி நகர் 2ஆவது குறுக்குத் தெரு, நேதாஜி சாலை என வேளச்சேரி முழுவதும் புதிய மழைநீர் வடிகால் அல்லது சீரமைப்பது போன்ற பணிகளில் மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது.

நீண்ட நாட்களாக இப்பணியானது நடைபெறுவதால் மக்கள் பெரும் இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர். வேளச்சேரி-தாம்பரம் பிரதான சாலையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணியால், பல்வேறு நேரங்களில் போக்குவரத்து நெரிசல் மற்றும் மண், தூசி அதிக அளவில் காற்று பறக்கிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் பெரும் சிரமப்படுகின்றனர்.

இது ஒருபுறம் இருந்தாலும் நேதாஜி சாலையில் கடைகள், வீடுகளுக்கு வெளியில் இந்த மழை நீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்டதால் அப்பகுதிகளில் இயல்பு வாழ்க்கை என்பதும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சாலையில் இருந்து கடைகளுக்கு அல்லது வீட்டுக்குச்செல்லவேண்டும் என்றால், பலகை மீது ஏறித்தான் செல்லவேண்டி உள்ளது. அங்கு இயங்கி வரும் மாநகராட்சி அங்கன்வாடி மையத்திற்குச்செல்லவேண்டும் என்றாலும் பாதுகாப்பற்ற முறையில் பலகை மேல் ஏறி குழந்தைகள் செல்கின்றனர்.

அதுமட்டுமின்றி சாலைக்கு நடுவில் தோண்டப்படுவதால் சாலை முழுவதும் சிதைந்துள்ளது. மழை பெய்த பிறகு, அந்த சாலையில் வாகனம் ஓட்டுவது பெரும் சவாலான நிலையில் உள்ளது. 3 மாதத்திற்கும் மேல் இதேபோல் தான் உள்ளது. தோண்டப்பட்ட பள்ளத்தில் மழை நீர், கழிவுநீருடன் சேர்ந்து துர்நாற்றம், கொசுத்தொல்லையும் அதிகமாக உள்ளது. கடைகளுக்கு முன் முழுமையாக தோண்டப்பட்டதால் வியாபாரம் பெரிய அளவில் இல்லை.

டாஸ்மாக்கிற்கு கொடுக்கும் முக்கியத்துவம் கூட அங்கன்வாடிகளுக்கு கொடுப்பதில்லை

எனவே, விரைவில் இந்தப்பணியை முடிக்க வேண்டும் என்று அங்கு இருக்கும் பொதுமக்கள் தெரிவித்தனர். சுகாதாரத்துறை அமைச்சர் தொகுதிக்கு ஒட்டிய தொகுதியில் இது போன்று இருப்பது இந்த ஆட்சி எவ்வாறு நடைபெறுகிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது' என சமூக ஆர்வலரும், மக்கள் நீதி மய்யத்தின் மாநிலச்செயலாளரும் ஆன சினேகா மோகன்தாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய அவர், "மழைநீர் வடிகால் பணி 98% விழுக்காடு முடிந்து 2% விழுக்காடு மட்டுமே பணிகள் மீதம் உள்ளதாக அமைச்சர் வேலு மற்றும் மேயர் பிரியா தெரிவித்துள்ளார்கள். ஆனால், இங்கு பொறுத்தவரையிலும் 2% மட்டுமே பணிகள் முடிந்து உள்ளன. 98% பணிகள் அப்படியே உள்ளன.

அமைச்சர் மற்றும் முதலமைச்சர் செல்லும் வழியில் மட்டும் அனைத்துப் பாதுகாப்புப் பணிகளும் செய்கின்றனர். ஆனால், இங்கு குழந்தைகள் படிக்கும் அங்கன்வாடி மையத்திற்குச்சென்று வர எந்தப்பாதுகாப்பும் இல்லை. இந்த மையம் அருகில் டாஸ்மாக் உள்ளது. அங்கு அனைத்து பணிகளையும் முடித்துவிட்டனர். ஆனால், இங்கு மாநகராட்சி இடம் புகார் தெரிவித்தும் சரிசெய்ய வில்லை.

டாஸ்மாக் இடத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவம் கூட மற்ற இடங்களுக்கு கொடுப்பதில்லை. சுகாதாரத்துறை அமைச்சர் தொகுதிக்கு ஒட்டிய தொகுதியில் இது போன்று இருப்பது இந்த ஆட்சி எவ்வாறு நடைபெறுகிறது என்பதற்கு எடுத்துக்காட்டு" எனத் தெரிவித்தார். விரைவில் பணிகள் முடிக்க வேண்டும் என்பதே மக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதையும் படிங்க:சென்னையில் 4,822 சாலைகள் சீரமைப்பு

ABOUT THE AUTHOR

...view details