நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்கு பின்னர், தலைமை நிர்வாகிகளை சந்தித்து வந்த கமல்ஹாசன் நேற்று (மே.9) மாவட்ட செயலாளர்கள், மண்டல துணைச்செயலாளர்கள், மாநில செயலாளர்கள் மற்றும் உயர்மட்ட நிர்வாகிகளை காணொலி காட்சி மூலம் சந்தித்து உரையாடினார்.
அப்போது கமல்ஹாசன் கூறுகையில், "மக்கள் நீதி மய்யம் எதன் காரணமாகவும் தன் பணியை நிறுத்தாது. முன்பை விட வேகமாக செயல்பட்டு மக்களின் ஆதரவைப் பெறுவோம். எனக்கு சோதனைகளும், விமர்சனங்களும் புதிதல்ல. என் நேர்மையைச் சந்தேகிப்பவர்களை நான் சும்மா விடமாட்டேன்.