இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆரம்ப சுகாதார நிலையங்கள் இருக்கும் நிலையினைக் காணும் போது, அரசுகள் கிராமங்களின் மீது அக்கறையின்றி செயல்பட்டுக்கொண்டிருப்பதைக் காணமுடிகின்றது.
கிராமங்கள் மீது அக்கறையின்றி செயல்படும் அரசு - கமல்ஹாசன் - : கிராமப்புறங்களில் உள்ள ஆரம்பச் சுகாதார மையங்கள்
சென்னை: கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களில் கரோனா நோய்த் தொற்றினை கட்டுப்படுத்த தேவையான உபகரணங்கள் போதுமான அளவு இல்லை என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

திறந்து கிடக்கும் சாக்கடை குழிகள், குப்பைகள் நிறைந்த வளாகங்கள், பணியாளர்கள் பற்றாக்குறையுடன் மருத்துவமனைகள், உபகரணங்கள் இல்லாத பணியாளர்கள் என கிராமப்புறங்களின் ஆரோக்கியத்தை அலட்சியப்படுத்தி விட்டு, நகரங்களை கட்டமைத்திருக்கிறது அரசு எந்திரம்.
இந்த கரோனா காலத்திலும் அதே தவறினை செய்யாமல் கிராமங்களை அரசு காத்திட வேண்டும். பராமரிப்பின்றி இருக்கும் ஆரம்ப சுகாதார மையங்கள் சீரமைக்கப்பட்டு, போதுமான பணியாளர்கள், பாதுகாப்பு கருவிகள், உயிர்காக்கும் மருந்துகள் அங்கே இருந்திட வழி செய்ய வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.