தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘பட்டினியில் கிடக்கும் பாதி இந்தியா; யாரைக்காக்க ஆயிரம் கோடியில் நாடாளுமன்றம்’ - கமல் கேள்வி - மநீம தலைவர் கமல்ஹாசன் கேள்வி

சென்னை: பாதி இந்தியா பட்டினியில் கிடக்கும்போது யாரைக்காக்க ஆயிரம் கோடியில் நாடாளுமன்றம் என பிரதமருக்கு மநீம தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

‘பட்னியில் கிடக்கும் பாதி இந்தியா: யாரைக்காக்க ஆயிரம் கோடியில் நாடாளுமன்றம்’ -கமல் கேள்வி!
‘பட்னியில் கிடக்கும் பாதி இந்தியா: யாரைக்காக்க ஆயிரம் கோடியில் நாடாளுமன்றம்’ -கமல் கேள்வி!

By

Published : Dec 13, 2020, 10:02 AM IST

Updated : Dec 13, 2020, 11:38 AM IST

டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகை முதல் இந்தியா கேட் வரையிலான மூன்று கிலோமீட்டர் தொலைவில் மத்திய அரசு, ’சென்ட்ரல் விஸ்டா’ என்ற புதிய திட்டத்தைச் செயல்படுத்தவுள்ளது. இத்திட்டத்தின்கீழ் கட்டப்படவுள்ள நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்துக்குப் பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் 10ஆம் தேதியன்று அடிக்கல் நாட்டினார்.

நாடாளுமன்றத்தின் புதிய கட்டட கட்டுமான பணி இரண்டு ஆண்டுகளில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது.

இந்நிலையில் நாடாளுமன்ற கட்டடம் எதற்கு எனக் கேள்வி எழுப்பியுள்ள நடிகரும், மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசன், “சீனப்பெருஞ்சுவர் கட்டும் பணியில் ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்துபோனார்கள்.

மக்களைக் காக்கத்தான் இந்தச் சுவர் என்றார்கள் மன்னர்கள். கரோனாவால் வாழ்வாதாரம் இழந்து பாதி இந்தியா பட்டினி கிடக்கையில், ஆயிரம் கோடியில் நாடாளுமன்றம் கட்டுவது யாரைக்காக்க?

மநீம தலைவர் கமல்ஹாசன் கேள்வி

பதில் சொல்லுங்கள் என் மாண்புமிகு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரே....” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படிங்க...'சீரமைப்போம் தமிழகத்தை' - இன்றுமுதல் கமல்ஹாசன் தேர்தல் பரப்புரை

Last Updated : Dec 13, 2020, 11:38 AM IST

ABOUT THE AUTHOR

...view details