தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆட்சிக்கு வந்தால் 50 லட்சம் பேருக்கு வேலை -கமல்ஹாசன் - MNM Kamal haasan news

சென்னை: தாங்கள் ஆட்சிக்கு வந்தால் 50 லட்சம் நபர்களுக்கு வேலை உருவாக்கி கொடுப்போம் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

50 லட்சம் நபர்களுக்கு வேலை  - கமல்
50 லட்சம் நபர்களுக்கு வேலை - கமல்

By

Published : Mar 5, 2021, 7:12 AM IST

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் பரப்புரையின் இரண்டாம் பொதுக்கூட்டம் சென்னை மடிப்பாக்கத்தில் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் பேசிய கட்சியின் தலைவர் கமல்ஹாசன், "ஓட்டு கேட்டு வருபவர்கள் சாதிக்கு செய்கிறோம் என்று கூறுகிறார். சாதிக்கு செய்வதை விட தமிழ் மக்களுக்கு செய்யுங்கள். அங்கே ஏழை தாய் மகன் அனைத்தையும் அம்பானிக்கும், அதானிக்கும் விற்றுவிட்டார். இங்கே விவசாயின் மகன் தமிழ்நாட்டில் கடன் அதிகம் ஏத்தி வைத்து விட்டார்.

ஆட்சிக்கு வந்த பிறகு நான் காவலராக இருக்க முடியாது. அதனால் இப்போ இருந்தே நல்லவர்கள் சேர்ந்து கொண்டு இருக்கிறேன். பாதி இந்தியா பட்டினியில் உள்ளது. வேலை இல்லை, வேலை கேட்டால் வேல் தருகிறார்கள். சமூக நீதி பேசி வரும் என் தம்பி திருமாவளவனுக்கு முதலில் 21 இடங்கள் அடுத்து 10 இப்போது 6. அடுத்து எங்கே வைப்பார்கள் என்று தெரியவில்லை. அவர் எங்களிடம் வருவார், அடுத்த தேர்தலில் பார்போம்.

தமிழ்நாட்டில் மக்கள் ஆட்சி மலர வேண்டும், வேறு எதுவும் மலர கூடாது. தமிழ்நாட்டில் டார்ச்லைட் ஒளி வீசும். 50 லட்சம் நபர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுப்போம். இல்லதரசிக்கு ஊதியம், கல்வி கொடுப்போம். 34 நாள்கள் இருக்கிறது, முடிந்த அளவுக்கு உழைத்து வெற்றி பெறுவோம்" என்றார்.

இதையும் படிங்க...குரலற்றவர்களின் குரலாக ஒலித்த ஈடிவி பாரத்திற்கு தெற்காசிய டிஜிட்டல் மீடியா விருது!

ABOUT THE AUTHOR

...view details