மக்கள் நீதி மய்யம் கட்சியை வலுப்படுத்தும் நோக்கத்தில் புதிய பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மக்களுக்கான அரசு அமைய வேண்டும் என்னும் நோக்கத்தில் பொறுப்பாளர்கள் செயல்பட வேண்டும் என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவுரை வழங்கினார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது:
மக்கள் நீதி மய்யம் கட்சி கடந்த மக்களவைத் தேர்தலில் கட்சி தொடங்கிய 14 மாதங்களில் அனைத்துத் தொகுதிகளிலும் நின்று அனைவரும் பாராட்டு வகையில் பெரும் மக்கள் ஆதரவினைப் பெற்றது. இது நம் அனைவருக்கும் பெரும் உற்சாகம் அளித்தது.
அதேநேரம் தமிழ்நாடு அரசியலை மாற்றியமைக்க வருகின்ற 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் மக்களுக்கான உண்மையான, நேர்மையான அரசு அமைத்திட நாம் இன்னும் வலிமையோடு களத்தில் இறங்க வேண்டும் என்பதை உணர்ந்து தமிழ்நாடு முழுவதும் நமது கட்சியின் கட்டமைப்பு மாற்றியமைக்கப்படுகிறது.