தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் ஆக.26ஆம் தேதி மநீம ஆலோசனைக் கூட்டம்! - chennai latest news

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக வருகின்ற ஆகஸ்ட் 26ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மநீம
மநீம

By

Published : Aug 23, 2021, 9:19 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனால் தமிழ்நாட்டில் புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் உள்ளிட்ட இடங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான பணிகளை, மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

உள்ளாட்சித் தேர்தல்

இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், உள்ளாட்சித் தேர்தலில் ஈடுபடுவது தொடர்பான பணிகளை தீவிரமாக தொடங்கியுள்ளன.

முன்னதாக உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியானது கண்டிப்பாக போட்டியிடும் எனவும், அந்த கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்து இருந்தார்.

ஆலோசனை

இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ளுதல், கட்சியின் அடுத்த கட்ட செயல்பாடுகள் தொடர்பாக, வருகின்ற ஆகஸ்ட் 26ஆம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டை ம.நீ.ம கட்சி அலுவலகத்தில் ஆலோசனை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கூட்டத்திற்கு மாவட்ட, மண்டல நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பேனர் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் - மு.க.ஸ்டாலின் கட்டளை

ABOUT THE AUTHOR

...view details